சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.02.2025
கவி இலக்கம்-293
“மாசி”
————
தை மகளை வழி அனுப்பி
மாசியான குறை பிரவசமான மாசியே
மாசிப்பனி மூசிப் பெய்யும்
கோணிச் சாக்கு தலையில் ஏறும்
மாதகல் கடலில் முரல் மீன்கள் துள்ளி விளையாடும்
மாசிக் குளிரில் முரல் பொரியல் வாயூறும்
மாலை தீவு மாசி கருவாடு சம்பலும்
றோஸ் பாணும்
சுடச்சுட பசி போக்கும்
வயல் நெல் மணிகள் பூத்து குலுங்கும்
மேனி சிலு சிலுக்க பனியும் குளிரும் கூடும்
மலையக உறவுகள் வேலை பெருகும்
தேயிலை கொழுந்து பனித் துளியால் மினு மினுங்கும்
பெண்கள் மூடிக்கட்டி மாசி பனியால் வேலையும் ஓடும்
வயிற்றுப் பசிக்கு குளிரென்ன
வாழ்க்கை வளம் பெற
மாசிப் பனியும் உதவும்
ஜெயா நடேசன் ஜேர்மனி