மாசி
ஃஃஃஃ
மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்//
மூசிப் பொழியுமே மோகம் தீரவே //
மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே//
ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்//
பனிமழையில் பாரும் ஒருதனியே கேளாய் //
விரியும் மலர்கள் நறுமணம் வீசவும் //
கொடிகளும் ஏறும் கோவில்கள் பலதும்//
கொட்டாட்டங்களும் குமுதமாகப் பரவிடும் //
மனதிலே மாசியும் தூசியும் துடைக்கும் //
வளர்மதியாய் வரவுகளும் வந்து குவியும் //
நெல்மணிகளும் குவியும் நிம்மதியும் பிறக்கும் //
சிவன் இராத்திரியும் சிறப்பாக நடக்கும் //
ஆதிமுதல்வனின் கருணையும் பெறவே பேருகைவருமே //
மங்களத்தின் அடையாளம் மணம்பரப்பி வருவதுதான் மாசி //
சிவருபன் சர்வேஸ்வரி