சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சத்திப்பு
கவி அழகு
*************
சேய் ஒன்றின் அமைதியில்
தாய் அவளின் தாலாட்டுக் கவி அழகு!
நோய் வந்தபோது
தாய் அவள் அபிராமியை
வாய் உச்சரிக்கும்
மணியே மணியின் ஒளியே….
அந்தாதிக் கவிஅழகு!
நம்நாட்டுக் கவி மகாகவி படைத்த
குறும்பாக் கவி அழகு!
சிந்தனைச் சிறகு விரித்து
எம் இனத்தின் வலிகளை
தம் வரிகளில் செதுக்கி
உருகவைத்த பெருங்கவி
இரத்தினதுரை ஐயா
கரங்களில் தவழ்ந்த பேனா முனையில்
சுரந்த செந்தமிழ்க்
கவி அழகு!
திருக்கோவில் வாசலில்
உருகி உருகிப் பாடும்
திருநாவுக்கரசர்
திருத்தாண்டகக்
கவி அழகு!
யாப்பிலக்கண முறையில்
காப்பியம் தந்து
கருத்துச் செறிவு நிறைந்து
உருப்பட வாழச் சொன்ன
திருவள்ளுவரின் குறள்வெண்பாக்
கவி அழகு!
சந்தம் சிந்திடப் ப.வை அவரின் நாவில் நயம் சொட்டும் நற்றமிழால்
பயன்பெறும் உறவுகளின்
கவி அழகு!

பாமுக ஊடகத்திற்கு நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.