சந்தம் சிந்தும் சந்திப்பு “கவி அழகு. “கற்பனையில் கரு எடுத்து
கவின் தமிழில் வரி வார்த்து
ஒப்பனையில் நகை அணிந்த நங்கை-அவள்
ஒயில் நடையின் ஒலிக்கிறது சதங்கை.
மரபென்ற அழகோடும்
புதிதென்ற எழிலோடும்
வருகின்ற நடை ஒலியில் சந்தம்-வரியோடு தாள லயம் கொஞ்சும்.
ஓவியத்தின் பாகத்தை
ஒருவரியில் சோகத்தை
காவி வரும் போது பெயர் ஹக்கு-கக்குற கருத்தும் ஒரு முத்து
கம்பன் கர கடுமையிலும்
சம்பந்தர் பதிகத்திலும்
வந்தபோது பொழிப்புரையை கொண்டு
வனப்பழகை புரிந்தார்கள் அன்று.
பாமரரும் தன் அழகை
பார்த்திடவே பாரதிக்குள்
தான் மலர்ந்து தேன் மதுர
சுவை மொழிந்து நின்றாள்.- இன்று திசை எங்கும்
நடை பவனி கொண்டாள்.
பாமுகத்து பாவையரும்
பக்கத்தே ஆடவரும்
பாவையரின் தோட்டத்தில் கூட
பாங்காய் வந்திணைவாள் சேர்ந் ஆட.
மோகன் கலை கோவிலையே
மோகித்து வியாழனிலும்
வாணி கலை வாணி என வந்து
வானலையில் வலம் வருவாள் நன்று.
-எல்லாளன்-