[ வாரம் 293 ]
“கவியழகு”
பரட்டைத்தலைமுடியும் பஞ்சடைந்த கண்ணும்
ஒட்டுப்போட்டும் மறையாத கிழிந்த உடையும்
தெருவிலே நடக்கும்போது தடுமாறும் நிலையும்
இவளை ஒரு அழகிஎன்றால் ஊரே நகைக்கும்
கண்ணாடி முன்னாடி கரகாடும் இன்றைய பெண்கள்
கண்டபடி பசைபூசி பள்ளங்களை நிரவும் கலைதெரிந்தவர்கள்
இவளைக்கண்டு இகழ் நகைபூப்பவர்கள்
பாவமிவள்! எண்ணைகண்டு பலநாள்
முகச்சாயமெறால் என்னவென்று தெரியாதவள்
பகட்டலங்காரம் கிஞ்சித்தும் அறியாதவள்
தீர்க்கமான பார்வை என்றும் குறையாதவள்
உழைத்துவாழும் நம்பிக்கை நிறைந்தவள்
இவளிடம் உள்ளது நிறைவான கவியழகு
மற்றவர்க்கில்லாத தனி அகஅழகு
புற அழகைமோகிக்கும் ஈனப்புத்தி மானிடர்க்கு
கவியழகின் உண்மைநிலை புரிவதில்லை இவருக்கு
உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் உத்தம பெண்ணே!
காலத்தாலும் அழியாதது உன் கவியழகு!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.