சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

கவி அழகு
அழகு அழகு கவியழகு
அமிர்தம் சிந்தும் மதியழகு
உள்ளம் நினைக்கும் வடிவமது
உன்னதமான உலகமது

வண்ணம் சிந்தும் வர்த்தைகளால்
வரைந்து வடிக்கும் ஓவியமே
கண்ணில் தோன்றும் கவர்ச்சிதனை
கயல்மீன் என்றே கவசொல்லும்

மண்ணில் தோன்றும் மகிமையுமே
மனதில் தோன்றும் மகிழ்வாக
எண்ணில் கவிதை வரிகளெல்லாம
இயற்கை அழகோ அழகன்றோ
கமலா ஜெயபாலன்