கவி அழகு
க௫வெடுத்தேன் சு௫க்கி
கவி கொடுதேன் செதுக்கி
கவி அழகு
சொல்லிதழ் மடித்தேன் இறுக்கி
சொர்கும் இனிமை கவி தொடக்கி
கவி அழகு
தமிழ் வேர் ஆழமதில்
தாய்மொழியின் ஆனந்தமிதில்
கவி அழகு
எதுகை மோனை விதிவழி
எடுப்பும் தொடுப்பும் எழுநெறி
கவி அழகு
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை எழில்
கற்பனை பொழிவு காலம் ௨வமை
இதன் முகில்
கவி அழகு
மெல்லினம் துள்ளி விளையாடும்
இடையினம் ஓடி ௨றவாடும்
கவி அழகு
வல்லினம் வந்து நடைபோடும்
வார்த்தைகள் வங்கி நடமாடும்
கவி அழகு
செதுக்கி சிலையென வடிக்கும்
சொற்கள்
பதுக்கி வைத்த எண்ணம் வெடிக்கும்
கவியின் அழகு
காலத்தின் கண்ணாடி தானே
கண்முன்னே சொல்லாடி தேனே
கவி அழகு
நன்றி
வஜிதா முஹம்மட்