தமிழிலே பிறந்து வளர்ந்தவர்கள்
தமிழால்கதைத்து விளையாடியவர்கள்
தமிழே மூச்சாய் விடுபவர்கள்
தமிழால் எம்முகவரி பெற்றவர்கள்
முதல்மொழி தமிழ்மொழி
எம்முதாதையர் பேசிய மொழி
மிகத்தொன்மையான மொழி
பிறமொழிகளே இம்மொழியிலிருந்து
தோன்றியதாம்
அத்தனை பெருமை வாய்ந்த மொழி
செம்மையான மொழி
செந்தமிழ் எனப்பொற்றப் படும் மொழி
செந்நாவினிக்கப் பேசும் மொழி
சந்தங்கள் எடுத்து கவிபுனையும் மொழி
கவித்துவத்திற்கு நயம் இனிமை
சேர்த்த மொழி
எம்தமிழ் மொழிபோல் எந்த
மொழியும் இல்லை
அதற்கு ஈடு இணை எதுவுமில்லை
நாம் தமிழரெனப் பெருமை கொள்வோம்
தமிழ்மொழி மாத்த்தில்
தமிழிலே கவி படைப்போம்!