வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய்
*****************
உலகம் வெறும் இருட்டு
பலதும் பத்தும் இருக்கும்
சீரான வாழ்வுக்கு
கூரான ஆயுதம்
நேரான போக்குத்தான்
போராடினாலே வெற்றி!
கொடுமைகள் கண்டால் கொதித்தெழல் வேண்டும்
உறுத்தட்டும் உள்ளங்களில்
உணர்வலைகள் பொங்கட்டும்
கறுத்த உள்ளம் கொண்ட கூட்டத்தை
நிறுத்தி வைத்து நியாயம் கேட்கணும்
பொறுமை வேண்டாம்
பொங்கி எழுதல் வேண்டும்
சிறுத்தைபோலச் சீற்றம் கொண்டு சிறுமையைப் புதைக்கணும்
பூனைக்கு மணி கட்டுதல் யார் என்று
பதுங்கி இருத்தல்
ஆகாது!