சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சிறுமை கண்டு பொங்குவாய்…
சங்கத் தமிழாய் முழங்குது
சாதனை உயர்வைத் திரட்டுது

மங்காப் புகழின் மாட்சிமை
மறவர் வீரத்தின் ஒற்றுமை
தரணித் தமிழின் தனித்துவம்
தாங்கிடும் சந்ததி முனைப்பிலே
ஒளிருமா இருளுமா
எதிர்காலம்

அணியெனத் திரண்டது புலமை
ஆற்றலை வளர்த்தது திறமை
ஆளுமை மெய்படும் மேன்மை
ஆணிவேராகுமா
புலமை

இரட்டை வாழ்வின் நிர்க்கதி
இயல்பில் குன்றிடும் இழுபறி
இல்லாதொழிந்திடும் சீற்றத்தை
கண்டு குமுறுதே
மனவலி

சீற்றம் தணிப்பதே
செம்மை
சினமின்றி வாழுதல் முறமை
சிறுமை கண்டு குமுறு
சீராய் வாழப் பழகு!
நன்றி