போனும் போராட்டமும்..
வாழ்வின் வலுவாய் கலந்தது
வருபவை அனைத்தும் இணைவது
சூழல் நிகழ்வை சுமப்பது
இதுவின்றி உலகே இயங்காது
இடரும் இயல்பும் ஒன்றித்து
இதுவே உலகென வியாபித்து
நகரும் பொழுதின் உயிர்ப்பிது
நாளும் புதுப்புது உற்பத்தி
நாமும் இதன் வழிபற்றி
நடக்கும் இயந்திர மின்சக்தி
ஊரை உலகை உசுப்பினும்
உறவை மகிழ்வை நிரப்பிடும்
ஒற்றை விரலின் கைங்கரியம்
ஒவ்வொரு கரத்திலும் உறவாடும்
ஒய்வற்ற சக்தியே உன்னாட்சி
எதனை வென்ற போதிலும்
இதனை வெறுப்போர் உளரே காண்
இன்றைய உலகாய் இயங்குது
இதற்குள் போர்நிலை தொடருது
அத்துமீறல் அவசியங்கள்
அகன்று விலகும் வீண்பொழுது
அவரவர் கைத்திறன் கட்டுப்பாடு
எம்மை நாமே புடமிட்டால்
ஏற்றமுண்டு இயல்பிலே
நாட்டம் தேவை நமக்குத்தான்
நம்மை நாமே சீர் செய்வோம்!
நன்றி