சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.12.2024
கவி இலக்கம்-291
“பூக்கும் புத்தாண்டு”
—————-
பூக்கும் புத்தாண்டே வருக
புதுப் பொலிவுடன் கொண்டு வருக
பூமியில் மலர்ந்த புன்னகையுடன் வருக
இன்ப துன்பங்கள் சமாதானமாய் கொடுக்க வருக
நிம்மதி தேடும் மாந்தர்க்கு
அமைதியை தந்திட வருக
புலர்கின்ற பொழுதெலாம் பூபாளம்
இசைத்திட வருக
அகத்தினில் அழுக்குகள் நீக்கி
அருள் விளக்கேற்றி
ஆனந்தம் கொண்டு வருக
இயற்கை அனத்தங்கள் இனி இல்லையென சொல்லி விட வருக
விடியலின் மடியில் வாழ்வு
சிறந்திட வருக
நாடும் வீடும் நலம் பெறவே
தமிழ் புத்தாண்டே வந்து விடு
புதியதான நல்ல செய்தியாக தந்திட வருக
ஜெயா நடேசன்