சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம சிந்தும்
வாரம் 291
பூக்கும் புத்தாண்டு

சென்றவை சென்றவையாக
வருபவை வந்தவையாக
வரவேற்று மகிழ்ந்திடுவோம் !

நடப்பவை நன்மைகே
நடைதனை காலத்துடன்
கரம் கோத்து
காவலன் காப்பவனுடன்

நாற்றிடும் நம்பிக்கை
நாற்றுடன்
நல்ல அறுவடை
பெறுவோம் என
நகர்ந்திடுவோம்
தென்றல் காற்றுடனே !….

க.குமரன்