இதயம்…
பேசாப் பொருளே
பெரு வாழ்வின் பொக்கிசமே
ஒய்வற்ற உன் துடிப்பில்
ஒடிடும் வாழ்வின் வரம்
அசைவற்றுப் போனாலே
உயிரற்ற உடலாவோம்
உனக்குள் உறைந்துள்ள உதிரமே- பேராற்றல்
உடல் நலத்தின் காப்பகமே
உயிர் வாழ்வின் பெட்டகமே
எதையுமே எதிர்கொண்டு எதிர்நீச்சல் தாடகமாய் உள்ளுக்குள் உறவாடும் உன்போல உறவேது
ஈர்ப்பின் வலுவேது!
நன்றி மிக்க நன்றி