சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 289 ]
“ஈரம்”

மழை தவறாது பெய்வதால் மண்ஈரமாகின்றது
மண்ணீரம் உணவுப்பயிர்களை உருவாக்குகின்றது
மழை பொய்த்தால் ஏது பயிர்? ஏது உணவு?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் திருக்குறள்

நெஞ்சில் ஈரமுள்ளோர் ஒற்றுமை பேணுவர்
தன்னுயிர்போல் மன்னுயிரையும் மதிப்பர்
இன்று ஒன்றுமை அருகி வேற்றுமை பெருக்குவர்
போட்டிகளைபோராக்கி உயிர்பலியில் ஈரம்காய்வர்

இறைவனின் ஈரம் ஆண்பெண் என படைத்தனன்
அன்புநிறைவை அன்னைக்குக்கொடுத்தனன்
தாய்மைதான் உயிர்ப்படைத்துக் காக்கவல்லவள்
பிள்ளைப்பாசத்தை உலகிற்கு உணர்த்தியவன்

குடும்பபாரத்தைச்சுமக்கும் கடமையையும் நம்பியவரை இறுதிவரை காக்கும் உறுதியையும் பெண்மையின் ஈரம்காக்கும் பொறுமையையும்
நெஞ்சீரமுள்ள பெண்களால் உலகமே வாழ்கின்றது

நல்லார்க்குபெய்யும் மழை யாவருக்கும் பயனாகும்
மாந்தரில் ஈரமற்றவர் கேடுவிளைவிப்பவர்
உலகில்கேடு பெருக மனிதம்அற்றவரும்பெருகுவர்
ஈற்றில் மனித உருவுடைய விலங்குகளே நடமாடும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.