வேண்டாமே வன்மம்
தினம்தோறும் நல்லெண்ணமும்
தித்திக்கும் சொற்பேச்சும்
திசைமாறிடும் ஒழுக்கழும்
தினசரி தீயாய் வலிக்குமே
பிணியில் வாடியபோதும்
அணைத்தெடுத்த உறவுகள்
வஞ்சித்து வார்த்தையால்
தள்ளிப்போகும் நண்பகுழாம்
பொறுமையாய் வலிகளை
தாங்கிய என் இதயமும்
உருக்குலையும் அகமும்
உருகிப்போன வெண்பனியாய்
வன்மமே வேண்டாமே
வாஞ்சையாய் நாமும்
வற்றாத ஊற்றுப்போல
வழிகாட்டியாய் இருப்போமே