வியாழன் கவிதை

பெஞ்சால் புயல்

rராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.12.24
ஆக்கம் 341
பெஞ்சால் புயல்

“பெஞ்சால் புயல்” புதுப்
பெயரில் போட்டு
வாங்குது

மழையோ கொட்டிக்
கொட்டி வயல், வரம்பு
முட்டி முட்டித் தேங்குது

ஆறு, குளம் உடைத்து
வெட்டிப் பாய்ந்து ஓடுது
பாம்பு,முதலை குடைந்து குதறுது
ஆடும்,மாடும் தவித்து ஆட்களுடன் சேர்ந்து
மிதந்து அலறுது

காலங்காலமாய் அடர்ந்து படர்ந்த
பல்லாண்டு வளர்ந்த
மரமோ அடி வேரோடு
கிளம்புது

அங்குமிங்கும் மாந்தர்
வீட்டை விட்டு வெளியேற வழி
இன்றித் தவித்திட
இளசுகளோ நாட்டு
நடப்பைக் கூட்டிப்
பெருக்கி வலை
ஒளியில் இல்லாத
பொல்லாத அல்லாத
கதை சொல்லி ஓடி
ஓடி நீச்சலடிக்கிறாரே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து