சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பனிப் பூ

இலையுதிர்ந்த மரங்களின்
நிர்வாணங்களை மறைத்து
மானம் காத்துக்கொண்ட
வானம் பொழிந்த ஆடையிது.

காட்ச்சிக்கு விருந்தாய்
கடமைக்கு தடையாய்
காணுமிடமெங்கிலும் பஞ்சாய்
படர்ந்து கிடக்கும் பனிப்பூவே!

வானம் சொரிந்த மலராய்
மண்ணை மூடிய நுரையாய்
பொங்கிய வடிகின்ற பாலாய்
நீ குவியல் கொள்கின்றாய்.

குழந்தைகள் குதூகலமாய்
கூடி விளையாடுடி
பொம்மைகள் ஆக்கி
பெருமகிழ்வு கொள்கின்றார்.

உன் மீது சறுக்கி
சாகசம் காட்ட்டிட
மலைகளை நோக்கியே
வீரர்கள் பயணங்கள் தொடர

வந்து சொரிந்த பூவே!
வாசல் தளுவிய பூவே!
வசந்தமும் உன்னாலே
வருத்தமும் உன்னாலே.