பனிப் பூ
ஊதி அவள்
சிரித்தாள்
மேனியிலே பட்டதால்
கூதல் என்னை தொட்டதே!
ஆடி அவள்
சுற்று கையில்
ஆகாயம் பூவாக
கொட்டவே !
வேகமாக அவள்
ஏந்த
காணாமல் போன
மாயம் ஏனடியோ !
கார் கால
இருளிலே
களங்கம் இல்லை
சொல்லடி !
பூ போன்ற
உன் இதழின்
புன்னகைக்கு விலை
என்ன சொல்லடி !
பனிப் பூவுக்கு
நன்றி சொல்வேன்
பாருக்கு பாச்சுகின்றாய்
வெண்மையை !
பாதம் பதித்து
பாதம். அளக்க
பஞ்சனையோ
சொல்லடி. ஈ……..
க.குமரன்