சந்தம் சிந்தும் கவிதை

வஜிதா முஹம்மட்

பனிப் பூ

வானம் வாடித்த பன்னீர்
வாழ்த்தியே பூமிக்கு சொன்னீர்

நீர்துளிகளுக்குள் பதுங்கி
நீடித்த திண்மத்தை விழுங்கி

கோர்த்து எறியும் பனிப்பூ
விண்ணி௫ந்து தரைஇறங்கும்
சிரிப்பு

வெண்மை பிடிங்கிய துடிப்பு
குளிர்மை அடங்கிய செழிப்பு

சிந்தும் நீரின் ௨றைவிடமே
சிறிய நேரம் ௨ம்வதிவிடமே

சிந்தி நீ சிதறுகின்றாய்
ப௫வத்தில் வந்து மல௫கின்றாய்

பூமிக்கு நீ வந்து போற்றுகின்றாய்
யாரை
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட
பயிர்செய்கையைத் தானே

வ௫டம் தோறும் வந்து வாழ்த்துகின்றாய்
வாழும் பொழுதே பனிப் பூ தூவுகின்றாய்

நன்றி பதிவேற்றிவிடவும்

வஜிதா முஹம்மட்