பனிப்பூ
ஃஃஃஃஃ
பனிவிழும் மழைத்துளியாய் காலத்தில் துளிரும் //
கனிவிழும் மரச்சோலை பூத்துமே காய்க்கவும் //
அலைமேவும் நிலமையும் அகன்றே போகுமே //
இனிமையும் கூடியே குளிர்மையும் கொட்டட்டும் //
தனிவழி இல்லையே தளராது பயணிக்க //
துணிவுதான் பிறக்கட்டும் துள்ளியே எழுந்திடுவாய் //
மலர்வுதான் மானிலம் மாண்புடன் சிறக்கட்டும் //
வீம்புமோ இல்லாது விடியலை நோக்கட்டும் //
கூம்பியது காணும் கரம்கூப்ப நீயெழுவாய் //
உயிர்பூ உன்னிடம் உகந்தது ஏற்றிடு //
வார்ப்பு ஒன்று இறைவன் வகுத்தது //
வரம்பு மீறாதே வரமுறையில் உள்ளது //
வேணாம் வீறாப்பு வெகுமதியாய் எழுவாய் //
தருவது பனிப்பூ எங்குமே பொழியுமே //
சிவருபன் சர்வேஸ்வரி