சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.11.2024
கவி இலக்கம்-287
“உயிர்க் கொடை”
—————
தமிழ் இன மக்களுக்காய்
உயிர்க் கொடை ஈகை செய்த உத்தமரே
மண்ணுக்காய் மரணித்து
விண்ணுக்காய் சென்றாலும்
உங்கள் கனவு நிறைவேறும்
தமிழீழம் ஒன்றே என்ற
நோக்கில்
உங்களை உயிரை ஈகை செய்த உத்தம மைந்தர்களே
கல்லறைகளில் புதைக்கப்பட்டாலும்
உங்கள் வரலாறு காடும் காந்தழ் மலரும்
கதைகள் பல சொல்லும்
தூய உள்ளத்துடன் நீங்கள் செய்தவைகள்
அழியாது எல்லோர்
மனதிலும் பதிந்திருக்கும்
குருதி வெள்ளமாய் ஓட
வலுவிழந்து போனாலும்
உங்கள் உயிர்க்கொடை
உலகம் போற்றும் உத்தமர்கள் எனப் போற்றும்
உங்கள் இலட்சியம் என்றும் நிறைவேறும்
காத்திருப்போம்
உங்கள் ஆத்மா வழிகாட்ட
இறைவனிடம வேண்டுவோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி