சந்த சிந்தும்
சந்திப்பு _170
“உயிர்கொடை”
நமக்காக
நம் மொழிக்காக
தம் இன்னுயிர்களை ஈகம் செய்த
தியாக செம்மல்கள்
தாம் வாழவிட்டாலும் தம் இனம் வாழ
தம்மை அர்பணித்த
தியாக தீபங்கள்
சாவுக்கு அஞ்சாத
சத்திய வான்கள்
நித்திய சீலிகள்
புறமுதுகு காட்டாத
புறநானுற்று
வீரர்கள்
இளமைக் கால கனவுகளை
எல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
எறி கணைக்குள்
எரி மலையாய் வெடித்தவர்கள்
குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்திய
உயிர்கொடை உன்னதமானது
உலகம் வியக்குது
தமிழினம்
தவிக்குது
வீரம் தெறிக்குது!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
23.11.24