சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மாற்றம்
மாற்றம் மானிடர் இயல்பு
மனிதம் மக்கள் மரபு
தோற்றம் வடிவ அமைப்பு
துரோகம் தூண்டும் கொடூரம்
வேற்றுமை விலக்கல் நன்று
வேதனை குறையும் இதனால்
ஒற்றுமை கண்டோம் இன்று
ஓங்கட்டும் நல்லதோர் நாடு
கற்றும் கடலும் ஒன்றே
காண்பது யாவும் அன்பே
பற்றுடன் வாழ்தல் முறையே
பண்பை அறிதல் மறையே
மற்றவை யாவும் அடைய
மௌனம் காத்தல் வழியே
கமலா ஜெயபாலன்