வியாழன் கவிதை

14.11.24 ஆக்கம் 337 ஒளியிலே தெரிவது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.11.24
ஆக்கம் 337
ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது
ஓங்கார வடிவம் புரியுது
தன் கட்சி வலுச் சேர்க்க
தமிழன் இழந்தது தாறன் தாறன் என்று
பின்னால் ஓடி வடம்
பிடிக்குது பிடிக்குது

புதுப் பாணியில் உயர்
பாதுகாப்பு வலயமோ
இடம்மாறித் திரியுது

மண்ணில் வேரூன்றி
வளர்ந்த மரங் கண்டு
விளையாடிய முற்றம்
வாழ்ந்த வீடு தேடிக்
கால்கள் விரையுது

நாளைய தேர்தல்
நாட்டு நடப்பில்
வேட்டு விட்டுத்
துட்டு கரையுது

சிதறிய தமிழரசுக் கட்சி
பதறிப் போய் பலவீனம்
ஆகுது
உதறி வரும் ஒளியிலே தெரிவது மெல்ல மெல்ல வந்து மனம் நிறையும் மாற்றம்
ஒன்று குதறி வரும்
தேர்தலில் வருகுது
என்று வருகுது இன்று.