வியாழன் கவிதை

ஒளியிலே தெரிவது……

நகுலா சிவநாதன்

ஒளியிலே தெரிவது……

ஒளியிலே தெரிவது ரீங்காரமா?
உணர்விலே முகிழ்ப்பது காந்தளா?
காந்தள் பூவும் கார்காலம் பூக்கும்
கனவும் அங்கே நனவாய் மாறும்

ஒளிரும் அறிவும் விழியில் மலர
களியும் காலம் கனத்து செல்லும்
வழியும் தெரியா வைகறை இருட்டு
விழியும் தேடும் விடியலின் ஒளிர்வை

கார்கால மேகமும் கண்ணீர் பொழியும்
போர்கால மேகமும் பொழிவை உகுக்கும்
நீர்த்தாரை வார்க்கும் மேகமும் அழும்
நித்தியமாய் எம்பிள்ளை ஒளியில் தெரிவானா?

ஏக்கங்கள் தாக்கமாய்ச் சுடர்விட
கார்த்திகையும் தீபமாய் ஒளிர
கண்ணீரின் நடுவே காந்தளும் ஒளிர
காத்திருக்கிறோம் காணாமல் போனவன் வருவானா?
ஒளியிலே தெரிவது நீதானா?

நகுலா சிவநாதன் 1786