ஒளியிலே தெரிவது
மனதினில் வலியும் மறந்திடா வாழ்வும்
மகிழ்சியும் இல்லை மாறிய நிலையும்
மானிடம் பேச்சும் மழுங்கிய கல்லாம்
மனதை தொலைத்து மாறும் வழியும்
மாதமும் நகர அகமும் ரணமாய்
மாண்டவர் மீண்டும் வராத கனமாய்
விடியாத மண்ணில் ஏற்றும் விளக்காய்
விடி வெள்ளியாய் வானத்திலே பிரகாசமாய்
கார்த்திகை பூக்களும் கல்லறை ஒளியும்
காவிய வீரருக்கு காசினி மழையும்
காலத்தால் அழியாத கண்ணீர் கடப்பும்
கடந்திடும் பாதை கடினமே என்றும்
உறவுகள் வாழ பாதையை உருவாக்கி
உணவுடன் கல்வி மேலோங்க சீர்தூக்கி
உறக்கம் தொலைத்த உயிரை இணைவாக்கி
உதிரத்து உறவுதனை நிலைமாற வழிகாட்டுமே