வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

காலத்தின் தூரிகை

காலத்தின் தூரிகை…
வரைந்தெழுதும் வரைமுறையில்
வரம்பிடுமே தூரிகை
வண்ணத்துக் கோலமாக்கி வனப்பாக்கும் உலகினை
காலத்தின் தோகைக்குள் கச்சிதமாய் அழகு
கலங்கரையாய் உலகினை கவர்கின்ற மிளிர்வு

பயிர்ச்செடிகள் வளர்ந்தாகும்
பசுமையின் செறிவு
பருவத்தின் கூறுகள் நான்காகும்
ஆண்டு

விலத்தாது விதவிதமாய் விதைப்பாகும் விளைவு
வியாதியே உலகாளும் விநோத
நிகழ்வு
இயற்கையின் இயல்போடு இடர்கிறது முடக்கம்
செயற்கையின் செல்வாக்கில்
செல்கிறதே நகர்வு

பருவத்தின் மாற்றம் போல்
படருமே பலது
காலத்தின் தூரிகை காட்டுகின்ற
வலிமை
ஞாலத்தின் வரைகோடு தாண்டுமே உலகை

சுற்றுகின்ற நேரத்தில் இவ்வாரம்
மாற்றம்
சுழன்றோடும் காலத்தின் தூரிகை
தீட்டுகின்ற தோற்றம்

வண்ணத்தை எண்ணமாய் வரம்பிடுவோம் வகுத்து
வரலாறு நிமிர்வாகும் காலத்தைக் கணித்து!
நன்றி