எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி என்று தேடிப்பார்க்கும் காலம் //
அங்கே இங்கேயென அலைபாயும் நினைவுகள் //
தூங்காமல் விழித்திருந்து வளர்த்த அன்னையோ //
அனாதை முகாமில் நிம்மதியைத் தொலைத்து //
சொத்துக்காக சொந்தங்களைப் பகைத்து தனிமையிலே //
வசந்த காலமாக இருந்த உறவுகள் //
பணமில்லை என்றே ஒதுக்கியும் வைப்பர் //
படித்தும் பண்பின்றி வார்த்தையும் ஆடலே //
ஒவ்வொன்றையும் பார்க்கும் இடத்தில் நிம்மதிவருமா //
புன்னகை என்னவிலை எனப்பாடிய கவிஞனுக்கு //
நிம்மதி என்னவிலை என்றும் தெரியவில்லையே /_
எங்கே தேடுகின்றேன் அதுவும் எட்டியே போகின்றது //
சிவருபன் சர்வேஸ்வரி