17.10.24
ஆக்கம் 334
உதிர்கின்ற இலைகளே
பூத்துக் குலுங்கிய பூவுடன் புதிர் போடுமே
காத்தில் கலங்கிய மறு
இலையுடன் சதிராடுமே
போர்த்திருந்த துளிர்
தளிருடன் குதிர்த்திடும்
கொழுந்தான இலை
பழுப்பாகி பரிதவிப்பு
ஆனதே
சேர்த்திருந்த பசுமை
வெப்பம், குளிர் -இலை
உதிர் காலமாற்றம்
ஆனதே
சிவப்பு,மஞ்சள் நிறம்
மாறி பேரொளியில்
அழகூட்டியது
இனிமை அழகானது
கனிவோடு உதிர்ந்து
சருகாகி மண்ணில்
உதிர்கின்ற இலைகளே
உழுத்து உரமாகியதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து