உதிர்கின்ற இலைகளே!
உதிர்கின்ற இலைகளே
ஒருகணம் நில்லுங்கள்
பதிக்கின்ற உன் மரத்தாலே
பாரே பெருமை பெறுகிறது.
வாழ்க்கை என்றால்
வளமும் இருக்கும்
வடிவங்களும் மாறும்
வீழ்கை என்றால் விதியும் மாறும்
வீழ்ச்சியும் வரும்
வண்ணமாய் நீ வாழ
வரலாறாய் பலஆண்டுகள்
ஒற்றைவரியில் கற்றுக்கொள்ள
ஆயிரம் பாடம் உன்மேல்
உள்ளதே!
விழுகின்ற இலைகளும்
வீழ்கின்ற வாழ்க்கையும்
மீண்டும் துளிர்க்காமல் போகலாம்
ஆனால் முயற்சி என்ற பாடம்
உன்னில் கற்றே உயர்கிறோம்.
உயிர் இருந்தால் துளிர்க்கலாம்
உணர்விருந்தால் முளைக்கலாம்
விழுகை வாழ்வுக்கு வழி
எழுகை உயர்வுக்கு வழி
வீழ்ந்து கிடாதே எழுந்து நட
சூழ்ந்து வரும் துயரும்
ஒருநாள் சென்றுவிடும்
நகுலா சிவநாதன்