சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 282
15/10/2024 செவ்வாய்
“பெருச்சாளி”
மகிடாசுர பெருச்சாளி
மடிந்த காலமிது!
மகாசக்தி அருள்மழை
பொழியும் நேரமிது!
உல்லாச பெருச்சாளிகள்
ஊர்விட்டு ஓடுது!
உலகின் மூலைகளில்
உறைவிடம் தேடுது!
சல்லாப வாழ்வின்று
சரிவு காணுது!
தில்லானா பாடியே
தெறித்து போகுது!
அல்லல் தானாகவே
அடங்கிப் போகுது!
தொல்லை மெதுவாக
தொலையப் போகுது!
நல்லாகும் வாழ்வென
நாடும் நினைக்குது!
கல்லார் கற்றோர்
கைசேரப் பார்க்குது!
எல்லாம் எளிதாய்
இனிதாய் நடக்குது!
நல்லாய் நடந்தால்….
நமக்கும் விடியுமா!
நன்றி
“மதிமகன்”