10.10.24
ஆக்கம் 334
மனநல தினம்
பத்தாம் திகதி பத்தாம்
மாதம் மனநல தினமே
பாரினில் இன நலமோ
விடையின்றி வினா
ஆனதே
நொந்து நோயாகாது
வாழ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஆனதே
குடல் காய்ந்து உடல்
மெலிந்து பசியில் மன
நலம் குன்றிய மரணம்
கனமானதே
இல்லாதவனுக்கு இருப்பவன் பகிர்வதும்
கல்லாதவனுக்கு கல்வி,
நற்பழக்கம் கற்றுக்
கொடுப்பதும் ஏலாதவனுக்கு உதவுவதும் தானமானதே
தாமாகச் சிந்திக்கும்
திறமை அதிகரிக்க
மன உளைச்சல் மறைய
அருமருந்தானதே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து