வியாழன் கவிதை

வாழ்க்கையோ வாழ்க்கை

ஜெயம் தங்கராஜா

கவி 744

வாழ்க்கையோ வாழ்க்கை

சிரிப்பு எங்கே சிரிப்பு எங்கே
எங்கே போனது
துரிதகதி வாழ்க்கையினால் செயலிழந்து போனது
பேச்சு எங்கே பேச்சு எங்கே
என்ன ஆனது
போச்சு போய் பல நாளாச்சு
என்று ஆனது

வலையொலியில் கானொலியை இரசித்தபடி
அம்மா ஒருமூலையில்
அலைபேசியில் எதையெதையோ பார்த்தபடி
அப்பா ஒரு மூலையில்
பிள்ளைகள் எங்கேயென தேடினால்
மேலறையில் படிக்கின்றார்கள்
தொல்லை யாரும் தராதபடி
அறையைப்பூட்டி படிக்கின்றார்கள்
விரலை கைபேசியில் தேச்சு தேச்சு ரேகையும்தான் அழிஞ்சுபோச்சு
குரலை வெளிக்காட்டாது தலைமுறைக்கு மவுணம் முத்திப்போச்சு
தாயகத்து ஆர்ப்பரித்த நிலமை அடியோடு விலகுதிங்கே
பேயகமாய் வீடு மாறி மவுணமாக உருவங்கள் உலவுதிங்கே

ஜெயம்
09-10-2024