சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-28..
தலைப்பு!
“அதிரடி”
………….
கையூட்டு ஊழல்
பெருச்சாளி – அதன்
கழுத்தை இறுக்கும்
புதிராளி!
நாட்டைத் திருத்த
வந்தாரு – அனுரா
நல்லாட்சி நடத்த
துணிந்தாரு!
கோட்டையில் ஓட்டை
பார்த்தாரு – அங்கு
குள்ளநரி யாரென
பிடித்தாரு!
தேசிய கீதம்
இசைத்தாரு – புத்த
பிக்குவும் எழுந்து
நின்றாரு!
அதிரடி பேரடி
கொடுத்தாரு – அனுரா
செயலே புரட்சியின்
வரலாறு!
அரசியல் கொள்ளையர்
பல நூறு – அனுரா
அடித்தால் சிதறுவார்
நீ பாரு!
சமநிலை வாழ்க்கை
மலர்ந்திடவே – மக்கள்
சகலரும் அன்பாய்
வாழ்ந்திடவே!
வறுமையை நாட்டில்
போக்கிடவே – அனுரா
வந்தார் நன்மை
படைத்திடவே!
தமிழர்கள் துயரைத்
துடைத்திடவே – அனுரா
தனித்துவம் படைப்பார்
நிலைத்திடவே!
சிங்கப்பூர் மலேசியா
நாடெனவே – அனுரா
செய்வார் உழைப்பால்
அனுதினமே!
அனுரா ஆட்சிக்குக்
கை கொடுப்போம் – அவர்
அதிரடி வென்றிட
கவி படிப்போம்!
– ஆசிரியை:அபிராமி கவிதாசன்
– 08.10.2024