சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.10.2024
கவி இலக்கம்-281
“அதிரடி”
——————-
அநுராவின் அதிரடி மாற்றம்
எதிரக்கட்சிகள் சீற்றம்
மக்கள் மனதில் ஏற்றம்
வாகனங்கள் பறிப்பு
காலி முகத்திடல் நிரப்பு
மக்கள் மனங்களில் வியப்பு
உலக நாடுகள் அதிரடி தாயகம் வரவு
அதிரடி சந்திப்பில் பலதும் கதைப்பு
பொருட்களின் விலை குறைப்பு
மக்கள் மனதினிலே பெரும் மகிழ்வு
திடீரென பல ஊழல்கள் கண்டு பிடிப்பு
மக்கள் பலதையும் அறிந்து வியப்பு
நாளாந்தம் மதுவால் மக்கள் அழிப்பு
மதுபானக் கடைகள் அனுமதிகள் பறிப்பு
அரச ஊழியர்கள் சம்பள உயர்வு
சட்ட திட்டங்கள அதிரடி பகிர்வு
புதிய ஜனாதிபதி செயற்பாடு நாளாந்தம் அதிரடி மாற்றங்கள்
மக்கள் மனதில் நாளாந்தம் வியப்பில் ஏற்றங்கள்
பழைய ஆட்சியாளர் மனதில் சீற்றங்கள்
நம் இனம் மக்களின் ஏக்கங்கள் தீருமோ
மும் இன மக்களும் சுதந்திர தாகம் பெற்று வாழ முடியுமோ
அநுரா முதல்வனின் அதிரடி செயல்பாடுகள் பலன் கிடைக்குமோ
காலம் பதில் சொல்ல காத்துக் கிடப்போம்
ஜெயா நடேசன் ஜேர்மனி