சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரவ்

அதிரடி ஆட்சியாளனே கேள்
(விருப்பத் தலைப்பு )

மந்திரித் தொகைக் குறைப்பு
குந்திய கதிரைகளின் தந்திரப் பறிப்பு

நீசிந்திடும் செயல்களில் சீர்திருத்த மோகம்
சிதைவுகள் கண்டதால் வந்ததோ தாகம்
சீறிப்படமெடுக்குதோ
உள்ளிருக்கும் நாகம்
அதனால்தான் பிறக்குதோ உனக்கு அதிரடி வேகம்

பறிபட்ட வாகனங்களின் அணிவகுப்பு
குறிப்பிட்ட பொருள்களின் விலைக் குறைப்பு
பிடிபடும் போதைப் பொருள் குவிப்பு
லஞ்சம் ஊழல் ஒழிப்பு
வீண்விரையத் தடுப்பு
அதற்கென எடுக்கும் அதிரடி எடுப்பு
தேனென இனிக்குது பலர்க்கு
தேலெனக் கொட்டுது சிலர்க்கு

அதிரடியை தடுக்கும் கேட்டை
அதிநுட்பமாய் செய்கின்றது சீனா
மிதிபடாது எழுந்து
மீதி காண்பாயோ அனுரா

காணாது போனோரைக் காட்டு
காவலை நீயும் கூட்டு
பேணாது கைதிகளை விடுவி
பேராண்மை எதுவெனக் நாட்டு

இதிலும் காட்டு அதிரடி
இல்லையெனில் தருவோம் பதிலடி

மனோகரி ஜெகதீஸ்வரன்