சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 281
09/10/2024செவ்வாய்
அதிரடி
————
பூர்வீக தேசம் அதிருது!
புதிதாய் எல்லாம் தெரியுது!
கார்கால முகிலும் கலையுது!
காண்பன எல்லாம் மிளிருது!
வடக்கும் மேற்கும் திகைக்குது!
வலையுள் விழுத்தப் பார்க்குது!
கிழக்கும் தனக்குள் குடையுது!
கீழால் ஏதேதோ செய்யுது!
அதிரடிச் செயல்கள் நீளுது!
ஆதரவுக் கரமும் திரளுது!
எடுபிடித் தலைகள் உருளுது!
எல்லாத் தேசமும் மிரளுது!
நாளுக்கு நாளாய் அதிரடிகள்!
நலம் நோக்கிய மனவெடிகள்!
ஆளுக்கு ஆள் புதுவெடிகள்!
ஆயிரம் ஆயிரம் சரவெடிகள்!
தமிழர் தலையும் நிமிருமா?
தாங்கிய துன்பமும் தீருமா?
எழில்மிகு நாடும் மலருமா?
எங்கும் இன்பமும் சூழுமா?
நன்றி
“மதிமகன்”
குறிப்பு
(வடக்கு_ இந்தியா
மேற்கு_ மேற்குலகு
கிழக்கு- சீனா)