அதிரடி
ஃஃஃஃ
அதிரடி வேட்டு யாருவைச்சார் ஓட்டு //
சொல்லடி சிவகாமி சுதந்திரம் பிறந்தாச்சு//
நில்லடி என்று நான் சொல்வதைக் கேளடி//
கல்லடி பட்டநெஞ்சும் கலங்கியே தெளிந்தாச்சு//
வல்லடி வழக்கும் இங்கு சபை ஏறாது//
பொல்லடி வேண்டிப் புறப்படும் நாள் வந்தாச்சு//
பொன்னடி ஏகடி ஏகநாயகன் அருளென்று//
சில்லென்று பூத்ததடி அதரடிப் போக்குகள்//
புல்லாகிப் போனது வாழ்வென்று எண்ணாதே//
வல்லமை கண்டிடவே வாகையும் சூடுமடி//
பொல்லாங்கு இல்லையடி அதிரடி சிறுக்கியே //
புகழொன்று பரவட்டும் பாருமே சிறந்திட //
சிவருபன் சர்வேஸ்வரி