வணக்கம்
சந்தம் சித்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
வெற்றிப் பயணம்
**********************
முயன்று அடையும் தாகம்
வெற்றி வேண்டும் என்ற நோக்கம்
முண்டித்தள்ளி முன்னேற்றி
முதன்மைப் படியில் ஏற்றும்!
திடமனது ஒன்றே போதும்
தடங்கல்கள் எது வந்த போதும்
தளராது உறுதிகொள்ள வேண்டும்!
நினைத்ததும் ஜெயித்தவர் எவருமில்லை
முனைப்புடன் விடாமுயற்சி செய்து
நிச்சயம் நம்பிக்கை மனதில் வைக்க
நல்ல வெற்றியைப் பெற்றிடலாம்!
போராட்டம் எத்தனை வந்தாலென்ன
சவால்கள் எத்தனை வந்தாலென்ன
சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இருக்கையில்
வெற்றிக்கனி பறித்திடலாம்!
எதிர்ப்பவர் எவராய் ஒருவராய் நின்றாலும்
எதிரியின் பலம் அறியவேண்டியது அவசியம்
எதிரியை வென்றெடுக்க அல்ல
உனை நீயே வென்றெடுக்க!
நன்றி வணக்கம்!