சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-280
வாரம்-01.10.2024
“வெற்றிப் பயணம்”
——————
அரசியலில் குழப்பங்கள் மலிந்து விட்டன
அரசியல் வாதிகள் நடைப் பிணங்களாகி விட்டன
புதிய அரசாட்சி வெற்றிப் பயணம் ஆரம்பித்து விட்டன
கடந்த ஆட்சியின் வண்டவாளங்கள் வெளியாகின்றன
அநுராவின் சட்ட திட்டங்கள்
வெற்றி நடை போட்டு பயணிக்கின்றன
தமிழ் இனத்திற்கு நல்ல காலம் பிறக்குமென
ஆவலுடன் நல்லாட்சியில் காத்து நிற்கின்றன
முதலில் தோல்வியும்
அடுத்து வெற்றியும
பிரயாணங்கள் தீர்மானிக்கின்றன
நல்ல நம்பிக்கையை தமக்குள் வைத்து உண்மையாக பயணித்தால் நல்லாட்சி
வெற்றிப் பயணம் நம்முடையதே
ஜெயா நடேசன்