சந்தம் சிந்தும் கவிதை

நேவிஸ் பிலிப் கவி இல(148) 26/09/24

“மனிதம் மலரட்டும்”
நீதி நேர்மை நிலவிட
நாட்டில் ஒற்றுமை ஓங்கிட
ஏற்றத் தாழ்வற்ற கல்வி முறை
பாரா பட்சமின்றி சமத்துவமாக

இன மத மொழி வேற்றுமையின்றி
மதங்களைப் போற்றி
நட்புறவுடன் வாழந்திட
உண்மை அன்புறவில்
ஊரெல்லாம் இணைந்திட

பஞ்சம் நீங்கிட
தொழில் வளம் பெருகிட
பசி வறுமை பட்டனி அகல
மனித மனங்கள் மகிழ

லஞ்சம் வஞ்சமேதுமில்லா
கள்வர் கயவர் குற்றமில்லா
போதையும் நோயும் ஒழிய
நன்னெறி ஆட்சி கண்டு
மனிதம் மலரட்டும்,.

நன்றி வணக்கம்