வெற்றிப் பயணம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வெற்றிமுரசு கொட்டுதங்கே கொண்டாட்டம் பாருதம்பி
வற்றிவிட்ட குளத்திலும் வைகைவந்து குதித்ததடா
பற்றிவிட்ட மகிழ்வினிலே மீன்களும் துள்ளுதுதம்பி
கற்றுவிட்ட போதினிலே களமாடவும் நின்றதடா
சுற்றிவிட்ட பம்பரம்போல் சக்கரமாய் சுழருதடா
இற்றவரை கஸ்டமென்றாய் இனியுமொரு சுகமேதம்பி
வீற்றிருந்தேன் அல்லிக் குளத்தருகே ஆரவாரம்கொட்டுதங்கே
தெற்குநோக்கி நின்ற தெய்வம் வடக்கிலே உதயமடா
சத்தியமாய் சொல்லிப்புட்டேன் சங்கதி தெரியுமா
வெற்றியும் எனக்குத்தான் நற்ச்சபையிலே தேர்வானேன்
முற்றிப் பழுத்ததடா முத்தமிழும் முக்கனியும்
விற்றிட முடியாத அழியாச் சொத்துமடா
சிவருபன் சர்வேஸ்வரி