சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி.க

விடியுமா தேசம்…?

புதிதாகவொரு விடியலாக நிதம் நிதம்….
அகங்களின் உணர்வில் ஆக்கும் அதுவே பதிவு…
எண்ணிய காரியம் காட்டுமதன் கோலம்…..ஏட்டின்
கணிப்பில் பேசும்
இதன் பொருளே…காட்டும் அதிலே எதிரும் புதிரும்….
ஆடுகளம் அமர்க்களம் கூடும் கணம் தேடும் விடியலே….கடந்தபாதை நாளை நமதே ….வரட்டும்
தரட்டும் வரவும் செலவும்….
இழப்பும் உழைப்பும் வாழ்வியல் சரிதம்….
உயரும் கரங்களின் வேட்கையில் விடியும் தேசம்…
விரியும் தேசம்…
மலரும் ஒற்றுமை
சேர்க்கும் நீதித்திரட்டு….
புலரும் விடியலாக பூக்கும்புதிய தேசம் .. . ..
போக்கும் கொடுமை தந்தவலி…வாழ்க வாழ்க தாய்மண்…