தமிழுக்கும் அமுதென்று பேர்
நேரிசைஒத்தாலிசை கலிப்பா
தரவு
பொதிகையிலே பிறந்திட்டு பெருமைதனைஉருவாக்கி
மதியெனவே ஒளிதந்தும் மகிழ்வுடனும் உலாவந்து பதிதனிலே நடமாடும் பைந்தமிழும் பவனிவர துதிக்கின்றோம் அழகுதமிழ் துலங்கிடவே புலந்தனிலும்
தாளிசை
உதிக்கின்ற பகலவனின் ஒலிதெறித்து மலர்ந்திடவும்
மதிநுட்பம் தனைக்கொண்டு மனமகஇழ்வாய்ப் பயின்றிடவும்
குதிக்கின்ற குழவிகளும் கூடியிங்கு தமிழ்கற்க
சதிசெய்யும் இனத்திடையும் தனிவிளக்கம் கொடுத்துடுவோம்
முதியோர் வளர்த்திட்ட முத்தமிழைச் சுவைத்திடவும்
நிதியின்றிப் புகட்டுகின்றார் நெறிகொண்டு
இதனுடனும்
சுரிதம்
தமிழும் அமுதாய் தரத்தில் உயர்வாய்
உமிழும் நீரில் உலவும்
தமிழின் உயர்வு தரணியும் புகழுதே
2)அறத்தின் வழி நிற்போம்
நேரிசை ஒத்தாளிசைக்கலிப்பா
புலருகின்ற பொழுதினிலே பொலிகன்ற கதிரவனும் மலருகின்ற மலர்களுமே மணம்பரப்பி வளிகலந்து
உலவிவரும் உலகெல்லாம் உயிரகொடுத்து மனிதருக்காய்
கலங்க கொண்ட தரணியிலும் பண்புள்ள உயிர்களுக்காய்
தாளிசை
நலமுடனும் வளமுடனும் நல்குகன்றஅறத்தினால் குலமதுவும் தழைத்திடவே கொடுக்கின்ற கொடையினால்
புலன்தினிலே சினம்குறைத்து பிழைநீக்கி நிறைவுடனும்
வலம்வருவோர் இருப்பதினால் மழையாயும் பொழிந்திடும்
நிலத்தினிலே நிகழ்கின்ற நிகரற்ற செயல்களினால் பலங்கொண்டு மணம்பரப்பி பரவசமாய் இருக்கின்றார்
இதனால்
அறமும் நிலைக்க அன்பும் பெருக
உறவாய் உயிர்கள் வாழ
சிறப்பாய் அனணத்துச் சினமும் காப்போம்.
குடி காக்கும் குமரன்
நேரிசை ஒத்தாளிசைக் கலிப்பா
தரவு
திருமகிழ்ந்து மனம்நெகிழ்ந்து தெவுட்டாதசிவன்மகனே
உருகுகிறேன் உள்ளத்திலே உருவாயும் உனைநினைத்து
விருப்புடனும் உனைப்பாடி வினைபோக்கி வரந்தருவாய்
அருள்தந்தே அரவணைப்பாய் உலகாளும் குமரேசா
தாளிசை
தருவினிலே அமர்ந்திருந்து கனிகொடுத்து பசி போக்கி
கருவினிலும் கலங்காத கிழவியையும்
கலங்கவைத்து
மருகனேயெம் மயிலேறும் மணிவண்ணன்
அருள் தருவாய்
வருத்தங்கள் அகற்றியிங்கு வரந்தருவாய் வேலவாநீ கிருபையுடன் குலம்காக்கும் குமாரதீபம் குன்றதனில்
குருவாயும் இருந்திங்கு குடிகாப்பாய் குமாரவேலா
ஏனென்றால்
உலகம் வாழ உமையான் பணிவேன்
கலகம் விலக்கி கரந்தா
குலமும் வாழ குமரா வருவாய்