சந்தம் சிந்தும் கவிதை

துவாரகன் ஷாமினி

மூடிய கண்கள்
திறக்கவில்லை
குனிந்த தலை
நிமிரவில்லை
கட்டப்பட்ட கைகளும்
அவிழ்க்கப்படவில்லை…

வாய்ப் பேச்சுக்கள்
சபை ஏறவில்லை
உண்ணா விரதங்கள்
கை கூடவில்லை
மெளன விரதங்களும்
கலைக்கப்படவில்லை…

தீச்சுடர்கள்
வெளிச்சம் தரவில்லை
மெழுகு திரிகள்
சுடரவில்லை
மின் விளக்குகளும்
ஒளி கொடுக்கவில்லை…

மாற்றங்கள்
நடக்கவில்லை
நம்பிக்கைகள்
இழக்கப்படவில்லை
கேள்விகள்
தொடுக்கின்றோம்
விடியுமா தேசம்???

-துவாரகன் சாமினி-
24.09.2024