விடியுமா தேசம்!
உருவமில்லா ஆசைகள்
ஓசையற்ற கனவுகள்
உள்ளமெனும் ஏட்டினிலே
ஓராயிரம் ஏக்காங்கள்
சொல்லிவிட வார்த்தையில்லை
சொந்தக்கதை சோகக்கதை!
முடிவற்ற இருளுக்குள்
மூச்சடைத்த இனமாக
விடிவெள்ளி காணாமல்
விரைகிறது ஆயுளுமே
பிடிச்சிராவி முதலைகளின்
பித்தலாட்ட அலைகளிடை
நித்தியமும் போராட்டம்
நிலைத்தெல்லாம் சேதாரம்!
ஆணவ அரசியல்
அகங்கார ஆதிக்கம்
சுரண்டியே வாழ்ந்திடும்
சுயநலக் கூட்டத்திடை
சிக்கிய மனிதம்
சிதைபடுதே தினந்தினம்!
நித்தியம் விலைபேசும்
நிரந்தர அரக்கரிடை
கடைச் சரக்காய்ச்
சுதந்திர வானம்!
விடிவெள்ளி தேடுகின்றார்
அப்பாவி மனிதர்!
கீத்தா பரமானந்தன்
23-09-24