சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

விடியுமா தேசம்

ஆணவம் பொங்கிவழியும் அதிகார தேசம்
ஆனதெல்லாம் அங்கே ஆயுதங்களே பேசும்
வலிகளுக்குள்ளே வழியை தேடிய இனமொன்று
வலிந்தவர் பிடியகற்றி விடுதலையாவது என்று

விடியல் என்பது ஆதவனால் கிழக்கில்
விடியவில்லை இதுவரைக்கும் ஈழத்து கிழக்கில்
அவராட்சி இவராட்சி முன்னேற்றமில்லை வடக்கில்
எவராட்சி வந்தாலும் சர்வாதிகாரிகளே தெற்கில்
அளவில்லா இயற்கை கொடைகளின் எல்லை
வளங்கள் பலவிருந்தும் நாட்டுப்பற்றுடன் மக்களில்லை
ஏலம்விட்டே நாட்டை அரசியல்வாதிகள் பிழைப்பார்கள்
ஆலம்விழுதெனச்சொல்லி பிற நாட்டவரும் நுழைவார்கள்

இரு இனத்துக்குள்ளே பிரச்சினையை உருவாக்கி
பெரும் சொத்தைச்சேர்க்க அதையே கருவாக்கி
சிங்களம் செய்யும் சித்து விளையாட்டு
எங்களில் சிலரும் அதற்கு தலையாட்டு

இனியும் பிரிவினை இலங்கையருள் எதற்கு
தனித்தனியாய் இருப்பதனால் தீர்ந்திடாது வழக்கு
சீனாவென்றும் இந்தியாவென்றும் எங்களை ஆளுவதா
வீணான வேற்றுமையுணர்வால் துர்ப்பாக்கியம் நீளுவதா

ஜெயம்
23-09-2024