விடியுமா தேசம்
விடியுமா! விடியுமா!
எம் தேசம் விடியுமா!
முடியுமா! முடியுமா!
எம் வேதனை முடியுமா!
தாய் மடியாய் தாங்கிய தேசம்
பேய் குடியாய் மாறிடலாமா
தேய் பிறையாய் எங்கள் தேசம்
தேய்ந்திட விட்டிடலாமா
கல்லெறி வாங்கும் காய் தரும் மரமாய்
செல்லெறி வாங்கிய எங்களின் தேசம்
காவல்களின்றி சிதைந்து விடாமல்
கல்லறை நாயகர் காத்தருள்வாரோ!
தியாகங்களால் நிறைந்த தேசம்
தீர்த்திடுமோ தன் தீரா தாகம்
வீரமாய் நின்ற விடுதலை மறவர்
வீரியம் வென்றே தீரும்.
சிதைந்துபோகும் இருப்பை கண்டு
ஒடித்துபோகும் எங்கள் வாழ்வு
விடிவு காண்பது எப்போ? நாங்கள்
விரும்பி வாழ்வதும் எப்போ?
வலிந்தவன் தரமறுக்கும் விடிவுக்காய்
வீறுகொண்டெளுந்த கரிகாலா!
விடிவு இன்றும் கிட்டவில்லை
உன் முடிவும் நாங்கள் எட்டவில்லை.
நீயிருந்த காலம் தந்த நிம்மதிகளை
மீட்டுப் பார்கி்கன்றேன்
மீளவும் கேட்கின்றேன்
உன் இருப்பே எமை காக்குமையா!
ஈழத்தாய் ஒர்நாள் இனிமைகாண்பாள்
அன்றே நாங்களும் இனிமையாவோம்
விடிவென்ற வெளிச்சத்தை நோக்கியே
எங்கள் பயணம் தொடரும்.