சந்தம் சிந்தும் கவிதை

ஔவை

விடியும் தேசம்.
————————–
நீலமும் பச்சையும்
நித்தம் பார்த்து
காலமும் போச்சு
கனவுகளும் போச்சு
கோலங்கள் போட்ட
கோமாளிகள் ஆட்சியில்
ஏலத்தில் நாடு
ஏமாந்து போச்சு

சிந்தனை புதிதாய்
செயல்கள் சிறப்பாய்
வந்தது சிவப்பு
வரவேற்போம் துணிந்து
சந்ததி புதிது
சாதிக்க நினைக்கும்
நிந்தனை வேண்டாம்
நிசமாக ஏற்போம்

வளமான நாட்டை
வரமாக ஆக்க
இளமையின் துடிப்பில்
எமக்கோர் தலைவன்
களவுகள் இல்லை
கடமையும் நன்றே
உளமார நோக்கம்
உள்ளத்தில் வேகம்

குடிசையில் பிறந்து
கோபுரமாய் உயர்ந்தாய்
அடிமை உடைப்பாய்
அனைத்தையும் இணைப்பாய்
முடியும் உன்னால்
முயல்வாய் நன்றே
விடியும் தேசம்
வெற்றியை நோக்கி…

ஒளவை.